ADDED : ஜூலை 22, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான், ஜூலை 23-
தேனுார் கண்மாய் அருகே தனியார் உர நிறுவனத்தின் பின்புறம் கருவேல மரங்களில் தீப்பிடித்து அருகே செடி, கொடிகளில் பற்றி பரவியது. சோழவந்தான் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையில் விரைந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
