நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தானம் அறக்கட்டளை, சுகம் அறக்கட்டளை சார்பில் மது போதை மறுவாழ்வு சிகிச்சை முகாம் நடந்தது. இதற்கான நிறைவு விழா மதுரை வலையப்பட்டியில் நடந்தது. டாக்டர் பரணிதரன் ஆலோசனை வழங்கினார். பயிற்றுநர்கள் சுரேஷ் சுரேந்திரன், விஜயலட்சுமி யோகா பயிற்சி அளித்தனர்.
அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் கலந்துரையாடல் நடந்தது. நிர்வாக இயக்குநர் வாசிமலை தலைமை வகித்தார். கிராமப்புற மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் முத்தையா, ஸ்ரீராம், ஐயப்பன், செந்தில்குமார், தானம் மக்கள் கல்வி நிலைய பயிற்றுநர் பால்சாமி ஒருங்கிணைத்தனர்.