/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆக்கிரமிப்பால் கால்வாய் மாயம்; மழைநீரில் மூழ்கும் நெற்பயிர்கள்
/
ஆக்கிரமிப்பால் கால்வாய் மாயம்; மழைநீரில் மூழ்கும் நெற்பயிர்கள்
ஆக்கிரமிப்பால் கால்வாய் மாயம்; மழைநீரில் மூழ்கும் நெற்பயிர்கள்
ஆக்கிரமிப்பால் கால்வாய் மாயம்; மழைநீரில் மூழ்கும் நெற்பயிர்கள்
ADDED : ஆக 13, 2024 06:18 AM

விக்கிரமங்கலம்: செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் ஊராட்சி கல்புளிச்சான்பட்டியில் வடிகால் கால்வாய் ஆக்கிரமிப்பால்மாயமானது. இதனால் அறுவடைக்கான 10 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் முழுவதும் மூழ்கி உள்ளது.
இப்பகுதியில் விக்கிரமங்கலம் கண்மாய் மற்றும் கிணற்று பாசனம் மூலம் நடவு செய்த நெற்பயிர்கள் இன்னும் சில வாரங்களில் அறுவடைக்கு தயாராகும். சில நாட்களாக இப்பகுதி வயல்களில் தேங்கும் மழைநீர், வடிந்து கல்புளிச்சான்பட்டியில் உசிலம்பட்டி ரோட்டை கடந்து பாஸ்டின் நகர் சர்ச் அருகே செல்லும் உபரிநீர் வாய்க்கால் வழியாக முதலைக்குளம் கண்மாய்க்கு செல்ல வேண்டும். இப்பகுதி கால்வாய் மாயமானதால் வடிந்து செல்ல முடியாமல் 10 ஏக்கருக்கு மேலான நெற்பயிர்களை மழைநீர் மூழ்கடித்துள்ளது.
விவசாயி ஜோதி: 5 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் விளை நிலங்கள், வீட்டடி மனைகளாக மாறியதால் 100 மீ., துார கால்வாயை மாயமாக்கிவிட்டனர். மழை தொடர்ந்தால் நெற்பயிர்கள் மூழ்கி அழுகிவிடும். ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாயை மீட்டு தர ஊராட்சி நிர்வாகம் மற்றும் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில்முறையிட்டும் பயனில்லை. மாற்றுத்திறனாளியான நான் 2 ஏக்கர் பயிர்களை பார்க்க இடுப்பளவு நீரில் சிரமப்பட்டு செல்கிறேன்.மன வேதனையாக உள்ளது. கலெக்டர் சங்கீதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

