/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம்
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம்
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம்
ADDED : ஏப் 11, 2024 05:40 AM

மதுரை : மதுரை தொகுதியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொறித்த சீட்டுகளை பொருத்தும் பணி நேற்று நடந்தது.
மதுரை தொகுதியில் 21 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இத்தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகள் வாரியாக உதவித் தேர்தல் அதிகாரிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களின் பாதுகாப்பில் உள்ள அந்த இயந்திரங்களில் மதுரை தொகுதியின் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொறித்த சீட்டுகளை பொருத்தும் பணி நேற்று நடந்தது.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்த இப்பணியில் பெல் நிறுவனத்தில் இருந்து வந்திருந்த ஊழியர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை விளக்கி சீல் வைத்தனர்.
மேலுார் தொகுதிக்கு மேலுார் ஆர்.டி.ஓ., அலுவலகம், மதுரை கிழக்கு தொகுதிக்கு மதுரை கிழக்கு தாலுகா, சோழவந்தானுக்கு வாடிப்பட்டி தாலுகா, மதுரை வடக்கு தொகுதிக்கு மதுரை மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகம், மதுரை தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகம், மதுரை மத்திக்கு மண்டலம் 3 அலுவலகம், மதுரை மேற்கு தொகுதிக்கு மேற்கு தாலுகா, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதிகளில் அங்குள்ள தாலுகா அலுவலகங்களிலும் இப்பணிகள் நடந்தன.
இவற்றை கலெக்டர் சங்கீதா, டி.ஆர்.ஓ., சக்திவேல் பார்வையிட்டனர்.

