ADDED : ஜூன் 13, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் சிம்மக்கல் கஸ்துாரிபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திறன் வளர்ப்பு குறித்து 'அறிவு ஆற்றல் அறம்' தலைப்பில் பேசினார்.
தலைமை ஆசிரியை ரீட்டா வரவேற்றார். மணிகண்டன் பேசியதாவது: கல்வியை முழு கவனத்துடன் கற்கும் அதே வேளையில் பொது அறிவையும் நுால்களிலும், நிகழ்வுகளை கவனிப்பதன் மூலமாகவும்தெரிந்து கொள்ள வேண்டும். தனித்திறமைகளை ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் ஆற்றலாக மேம்படுத்த வேண்டும். மனதில் துாய்மை, உதவும் மனப்பான்மை உள்ளிட்ட அறம் சார்ந்த பண்புகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.