ADDED : செப் 12, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: 'டெபிட் கார்டு, அலைபேசி வழி ஜி பே, கூகுள் பே முறையில் விதை, இடுபொருள், உரத்திற்கான தொகையை விவசாயிகள் செலுத்த வேண்டும்' என மதுரை வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.
உழவன் செயலியில் பதிந்துள்ள விவசாயிகளுக்கு மானியங்கள், சலுகைகள் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. மத்திய அரசின் பி.எம்., கிசான் திட்ட நிதியும் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதே போல விவசாயிகளுக்கான உரம், இடுபொருள், விதைகள் வழங்குவதற்கும் வேளாண் துறை நவீனத்துவத்தை பின்பற்றுகிறது.
அந்த வகையில் பணத்தை ரொக்கமாக கொடுத்து விவசாய பொருட்களை வாங்குவதற்கு பதிலாக, விவசாயிகள் டெபிட் கார்டு, அலைபேசி வழி ஜி பே, கூகுள் பே பயன்படுத்த வேண்டும் என்றார்.