/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
யுடியூபர் காரை ஒப்படைக்க கோரிய வழக்கு தள்ளுபடி
/
யுடியூபர் காரை ஒப்படைக்க கோரிய வழக்கு தள்ளுபடி
ADDED : ஜூலை 13, 2024 04:18 AM
மதுரை, : சென்னையிலிருந்து திருச்செந்துார் நோக்கி மே 15 ல் காரில் யுடியூபர் வாசன் சென்றார். மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அலைபேசியில் பேசியவாறு காரை ஓட்டியதாக போலீசார் வழக்கு பதிந்தனர். அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு மதுரை நீதிமன்றம் ஜாமின் அனுமதித்தது. காரை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி வாசனின் தாய் மதுரை (ஜெ.எம்.,6) நீதிமன்றத்தில் மனு செய்தார்.
நீதிபதி சுப்புலட்சுமி: குற்றம் சாட்டப்பட்டுள்ள வாசன் மீண்டும் காரை பயன்படுத்தினால் அதேபோன்ற செயலை செய்ய வாய்ப்பு உள்ளது. காரை ஒப்படைக்க உத்தரவிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.

