/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை விரிப்புகளை மாற்ற வழக்கு
/
மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை விரிப்புகளை மாற்ற வழக்கு
மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை விரிப்புகளை மாற்ற வழக்கு
மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை விரிப்புகளை மாற்ற வழக்கு
ADDED : ஆக 17, 2024 02:01 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை உள்நோயாளிகளின் படுக்கை விரிப்புகளை சலவை செய்து தினமும் மாற்றக்கோரிய வழக்கில் தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை கே.கே.நகர் வெரோணிக்கா மேரி தாக்கல் செய்த பொதுநல மனு: இம்மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள்செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மீதுள்ள விரிப்புகளை சலவை செய்ய தினசரி மாற்றுவதில்லை. அழுக்கடைந்து, சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் நோயாளிகளின் படுக்கை விரிப்புகள் ஒவ்வொரு வண்ணத்தில் மாற்றப்படுகின்றன.
வாரத்தில் 7 நாட்களும் எந்தெந்த வண்ணங்களில் விரிப்புகள் மாற்றப்படுகின்றன குறித்து வெளிப்படைத் தன்மையுடன் வார்டுகளில் அறிவிப்பு இடம்பெறுகிறது. இதை பின்பற்றாவிடில் மருத்துவ அலுவலர்களிடம் கேள்வி எழுப்ப முடிகிறது. அந்நடைமுறையை பின்பற்றி மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை விரிப்புகளை சலவை செய்து தினமும் மாற்ற வலியுறுத்திதமிழக சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு மருத்துவக் கல்வி இயக்குனர், அரசு மருத்துவமனை டீன் செப்.,13ல் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.