ADDED : செப் 01, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை புதுார் பன்னீர்செல்வம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை அரசு மருத்துவமனை முன் வண்டியூர் நீர்வரத்து கால்வாய் செல்கிறது.
மேல் மூடி இல்லை. பக்கவாட்டுச்சுவரை உயரமாக அமைக்கவில்லை. பாதசாரிகள் தவறி உள்ளே விழ வாய்ப்புள்ளது. கழிவுகள் தேங்கியுள்ளன. சுத்தம் செய்ய நடவடிக்கை இல்லை. கொசுக்கள், பூச்சிகள் உற்பத்தியாகி நோய்களை பரப்புகின்றன. ஆக்கிரமிப்புகள் உள்ளன.
கால்வாயை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு ஒத்திவைத்தது.