sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: தமிழ்நாடு பிராமண சமாஜம் வலியுறுத்தல்

/

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: தமிழ்நாடு பிராமண சமாஜம் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: தமிழ்நாடு பிராமண சமாஜம் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: தமிழ்நாடு பிராமண சமாஜம் வலியுறுத்தல்


ADDED : செப் 02, 2024 06:37 AM

Google News

ADDED : செப் 02, 2024 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, மதுரையில் நடந்த தமிழ்நாடு பிராமண சமாஜ மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மதுரையில் தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் மாநில பொதுக்குழு மற்றும் மாவட்ட மாநாடு மாநில தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் ரவி வரவேற்றார். பொது செயலாளர் ரமேஷ்குமார், மூத்த ஆலோசகர்கள் ஜெகநாத ஐயங்கார், சூரியநாராயணன், முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி என்ற ராஜூ, மாவட்ட செயலாளர் ஸ்ரீராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு தொகுத்து வழங்கினார். பா.ஜ., மாநில பொது செயலாளர் சீனிவாசன், எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன், சத்குரு சங்கீத சமாஜம் சீனிவாசராகவன் உட்பட பலருக்கு சேவை விருது வழங்கப்பட்டது.

சென்னை மாகாணமாக இருந்த போது 1931ல் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடந்தது. அன்று பிராமணர்கள் 30 சதவீதம் பேர் இருந்தனர். ஆனால் இன்று 3 சதவீதம் பேர் உள்ளதாக கூறுகின்றனர். சரியான எண்ணிக்கையை அறிய சமத்துவ சமுதாயம் உருவாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்க தேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்தி, அவர்களை பாதுகாக்க அங்கு சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் தினமலர்நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு 'விப்ர ரத்னா' விருது வழங்கப்பட்டது. அவர் 'மகாரதி தொண்டர்கள்' என்ற திட்டத்தை துவக்கி வைத்துப் பேசுகையில், ''வாழ்க்கையில் பொய், ஏமாற்றுவது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. முறையாக வருமான வரி செலுத்த வேண்டும். அப்போதுதான் நிம்மதியாக உறங்க முடியும்,'' என்றார்.

ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசுகையில், ''பக்தியும், ஒழுக்கமும் இளமையில் வந்தால் அது காலத்திற்கும் நிலைத்து நிற்கும். பிராமணர் என்றாலே தமிழுக்கு வேண்டாதவர்கள் என்று சிலர் கூறி வைத்துள்ளனர். இது தவறு. உ.வே.சாமிநாதய்யர் இல்லையெனில் இன்று தமிழே இல்லை. பிராமணர்கள் அனைவரையும் அரவணைத்து செல்பவர்கள். ஆனால் இன்று ஆரியத்தை ஒழிப்போம் என்கின்றனர். ஆரியம் என்றால் உயர்ந்தவன், உத்தமமானவன் என்றுதான் பொருள்,'' என்றார்.






      Dinamalar
      Follow us