/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குறையும் மேய்ச்சல் பரப்பால் கால்நடை வளர்ப்போர் தவிப்பு
/
குறையும் மேய்ச்சல் பரப்பால் கால்நடை வளர்ப்போர் தவிப்பு
குறையும் மேய்ச்சல் பரப்பால் கால்நடை வளர்ப்போர் தவிப்பு
குறையும் மேய்ச்சல் பரப்பால் கால்நடை வளர்ப்போர் தவிப்பு
ADDED : ஏப் 22, 2024 05:49 AM
பேரையூர் : பேரையூர் பகுதியில் வறட்சி காரணமாக மேய்ச்சல் பரப்பு குறைந்து வருவதால் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் கிணற்றுப்பாசனம், மானாவாரி நிலங்கள் உட்பட விளைநிலங்கள் செழித்து இருந்தன.
இதனால் கால்நடை தீவனப் பயிர்களுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை. கடந்த சில மாதங்களாக வெப்பம் அதிகரித்துள்ளதால் நிலத்தடி நீர் குறைந்தது. விவசாயிகள் பயிர் சாகுபடியின்றி தவித்தனர்.
இந்நிலையில் கால்நடைகளுக்கு வழங்கும் வைக்கோல், சோளத்தட்டை, பசும்புற்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கால்நடைகளால் ஓரளவுக்கு வருமானம் ஈட்டிய விவசாயிகள், தீவனப் பற்றாக்குறையால் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர். கடும் வெயில் காரணமாக அனைத்து. பகுதிகளும் வறண்டு, காய்ந்து விட்டன.
ஓட்டிச்செல்லப்படும் கால்நடைகள் ஆங்காங்கு கிடைக்கும் காய்ந்த சருகுகளையே தீவனமாக்கி கொள்கின்றன.
குளங்கள், கண்மாய்கள் உட்பட அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் குறைந்து வருவதால் குடிநீருக்கும் வாய்ப்பின்றி தவிக்கும் நிலை உள்ளது.
விவசாயிகள் ஈஸ்வரன் கூறியதாவது:
நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்க்கிறேன். வெயிலால் கால்நடைகளை பராமரிக்க முடியவில்லை. பசுந்தீவனங்கள் காய்ந்து விட்டன.
காய்ந்த சருகுகளை கால்நடைகள் உணவாக எடுக்கின்றன.
ஆதனால் ஆடுகள் மெலிந்து விட்டன. இத்தனை ஆடுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என தெரியவில்லை என்றார்.

