/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குறுவட்ட கால்பந்து, கபடி, எறிபந்து போட்டி
/
குறுவட்ட கால்பந்து, கபடி, எறிபந்து போட்டி
ADDED : ஆக 11, 2024 04:46 AM
மதுரை, : பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆரப்பாளையம் குறுவட்ட பள்ளிகளுக்கான போட்டிகளை செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி நடத்தியது.
ஆடவர் கால்பந்து போட்டி
14 வயது பிரிவில் சேதுபதி மேல்நிலைப் பள்ளி முதலிடம், செவன்த்டே அட்வென்டிஸ்ட் பள்ளி 2ம் இடம் பெற்றன.
17 வயது பிரிவில் சிவகாசி நாடார் பள்ளி முதலிடம், செவன்த்டே அட்வென்டிஸ்ட் பள்ளி 2ம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் சேதுபதி பள்ளி முதலிடம், சிவகாசி நாடார் பள்ளி 2ம் இடம் பெற்றன.
மகளிர் கபடி போட்டி
14 வயது, 17 வயது பிரிவில் கேப்டன் ஹால் பள்ளி முதலிடம், மங்கையர்க்கரசி நடுநிலைப் பள்ளி 2ம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடம், கேப்ரன்ஹால் பள்ளி 2ம் இடம் பெற்றன.
ஆடவர் எறிபந்து போட்டி
14 வயது பிரிவில் செயின்ட் பிரிட்டோ பள்ளி முதலிடம், வீரமாமுனிவர் நடுநிலைப் பள்ளி 2ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் செயின்ட் பிரிட்டோ பள்ளி முதலிடம், ஹோலி ஏஞ்சல் பள்ளி 2ம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் மதுரைக் கல்லுாரி பள்ளி முதலிடம், செயின்ட் பிரிட்டோ பள்ளி 2ம் இடம் பெற்றன.மகளிர் எறிபந்து 14 வயது, 19 வயது பிரிவில் செவன்த்டே மெட்ரிக் பள்ளி முதலிடம், வெள்ளி வீதியார் மாநகராட்சி பள்ளி 2ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் ஹோலி ஏஞ்சல் பள்ளி முதலிடம், கேப்ரன் ஹால் பள்ளி 2ம் இடம் பெற்றன.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி குறுவட்ட பால் பேட்மின்டன் போட்டிகள் கே.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
தலைமை ஆசிரியர் சரவணகுமார், உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் துவக்கி வைத்தனர்.
14, 17, 19 வயது ஆடவர், மகளிர் ஆகிய மூன்று பிரிவுகளிலும் கே.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பளி மாணவ, மாணவியர்கள் முதலிடம் பெற்றனர்.