/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குறுவட்ட போட்டி: ஹாக்கியில் வென்ற பள்ளிகள்
/
குறுவட்ட போட்டி: ஹாக்கியில் வென்ற பள்ளிகள்
ADDED : ஆக 03, 2024 06:23 AM

திருநகர் : திருநகர் குறுவட்ட பள்ளி மாணவர்களுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் ஹாக்கி போட்டிகளில் வென்ற பள்ளிகள் வருமாறு:
புனித சார்லஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடக்கும் இப்போட்டிகளில் ஹாக்கி போட்டி பெண்கள் பிரிவில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் வேடர் புளியங்குளம் பள்ளி முதலிடம், அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2வது இடம் பெற்றன. 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் புனித மேரி ஆப் லுக்கா பள்ளி முதலிடம், சிறுமலர் பள்ளி 2வது இடம் பெற்றன. 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சிறு மலர் பள்ளி முதலிடம், எஸ்.பி.ஓ. பள்ளி 2வது இடம் பெற்றன.
ஆண்கள் பிரிவு
14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் இந்திரா காந்தி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம், முத்துத் தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி 2வது இடம் பெற்றன. 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்திரா காந்தி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம், முத்து தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி 2வது இடம் பெற்றன.
19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்திரா காந்தி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம், முத்துத் தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி 2வது இடம் பெற்றன.