ADDED : ஜூன் 09, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி, : கோவையில் உலக சிலம்பம் விளையாட்டு கழகம் சார்பில் சர்வதேச சிலம்ப போட்டிகள் நடந்தன.
இதில் பரவை ஆசான் காட்டுராஜா இலவச சிலம்ப பயிற்சி பள்ளி மாணவ மாணவியர்கள் வயது மற்றும் போட்டி பிரிவுகளில் 11 தங்கம், 12 வெள்ளி, 5 வெண்கல பதக்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றனர்.
அவர்களை பயிற்சியாளர்கள் இன்பவள்ளி, முத்துநாயகம் உட்பட பலர் பாராட்டினர்.