ADDED : மே 02, 2024 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மாநகராட்சி 97வது வார்டு திருப்பரங்குன்றம் சந்திராபாளையம். தாழ்வான பகுதி வீடுகளுக்குள் கழிவுநீர் செல்வது, தண்ணீர் வசதி இல்லாத பொது கழிப்பறை உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் அவதியுறுகின்றனர்.
5 தெருக்களில் 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ரோடுகள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. குடிநீர் குழாய் பதிக்க தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படவில்லை. மேல்நிலை நீர் தேக்க தொட்டி 15 ஆண்டுகளாக செயல்பாடின்றி உள்ளது. பொது கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து தண்ணீர் கொண்டு செல்கின்றனர். கழிவு நீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய பல இடங்களில் தோண்டப்பட்டு பள்ளங்களாக உள்ளன. இப்பகுதி பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை தேவை என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

