/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை ரயில் போக்குவரத்தில் மாற்றம்
/
மதுரை ரயில் போக்குவரத்தில் மாற்றம்
ADDED : ஆக 03, 2024 06:28 AM

மதுரை : மதுரை கோட்டத்தில் தொழில் நுட்ப பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை --- ராமநாதபுரம் (06653) இடையே ஆக. 5, 6, 8, 9, 11 ல் மதியம் 12:30 மணிக்கு செல்லும் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு (06654) காலை 11:00 மணிக்கு ஆக 5, 6, 8, 9, 11 ல் வரும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
குருவாயூரில் இருந்து இரவு 11:15 மணிக்கு சென்னை எழும்பூருக்கு ஆக. 4, 5, 8, 10 ல் செல்லும் விரைவு ரயில் (16128) விருதுநகர் வழியாக மாற்றி மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை சென்று திருச்சிக்கு சென்றடையும். மாற்று வழியில் செல்வதால் மானாமதுரை, காரைக்குடியில் கூடுதல் நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து குருவாயூருக்கு ஆக. 8 காலை 9:45 மணிக்கு செல்லும் விரைவு ரயில் (16127) புதுக்கோட்டை வழியாக மாறி வந்து மானாமதுரை, விருதுநகர் வந்தடையும். இந்த ரயிலுக்கும் காரைக்குடி, மானாமதுரையில் கூடுதல் நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு ஆக. 8 மதியம் 12:00 மணிக்கு செல்லும் விரைவு ரயில் (16847) புதுக்கோட்டை வழியாக மாற்றி மானாமதுரை, விருதுநகருக்கு வந்தடையும். மாற்று வழியில் செல்வதால் காரைக்குடி, மானாமதுரை ஸ்டேஷன்களில் கூடுதல் நிறுத்தங்கள் உண்டு.
திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு ஆக. 4, 11, 18, 25 தவிர ஆக.2 முதல் 31 வரை காலை 10:15 மணிக்கு செல்லும்ரயில் (06829) திருச்சியில் இருந்து மதியம் 2:30 மணிக்கு தாமதமாக செல்லும்.