
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : திருவாதவூரில் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி திருவிழா மே 13ல் துவங்கியது. மே 17 ல் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமியும், அம்மனும் மேலுார் மாங்கொட்டை திருவிழாவில் எழுந்தருளினர். மே 20ல் திருக்கல்யாணம் நடந்தது.
நேற்று அம்மனும், சுவாமியும் தேரில் எழுந்தருளினர்.
பூஞ்சுத்தி, கட்டையம்பட்டி, பதினெட்டாங்குடி பகுதி மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று (மே 22) கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

