ADDED : செப் 08, 2026 10:43 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்டம் மேலுார் அருகே செயல்பட்ட எப்.கியூ.எல்.,நிதி நிறுவனம் ஆன்லைன் டிரேடிங் செயலி வழியாக பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் எனக்கூறி ஏஜன்ட்களை நியமித்தது.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த பலர் முதலீடு செய்தனர். பின் நிதி நிறுவனம் மூடப்பட்டது. ரூ.30 கோடி மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். ஏஜன்ட்களான மேலுார் தம்பதி ரஞ்சித், பிரியதர்ஷினி நேற்று முன்தினம் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை நேற்று போலீசார் மதுரை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி முத்துக்குமரன் இருவரையும் செப்.22 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
