ADDED : ஜூலை 08, 2024 06:27 AM

கொட்டாம்பட்டி: எட்டிமங்கலத்தில் சிதிலமடைந்த கட்டடத்தில் துணை சுகாதார நிலையம் செயல்படுவதால் கர்ப்பிணிகள், நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர்.
எட்டிமங்கலத்தில் ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டதால், சிதலமடைந்த பழைய கட்டடத்தில் துணை சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு மக்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர்.
ஸ்டாலின்: துணை சுகாதார நிலையத்தின் மேல்பகுதியில் பல இடங்களில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ளன. தவிர மேல்தளத்தில் ஆலமரம் முளைத்ததால் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு விழும் நிலையில் உள்ளது. மரக்கதவு, ஜன்னல்களை கரையான் அரித்துவிட்டது.
சுகாதாரத்துறையினர் புதிய கட்டடம் கட்டி இப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர்.
வட்டார மருத்துவ அலுவலர் சண்முகபெருமாள் கூறுகையில், உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.