/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேரோட்டம்: ஆக்கிரமிப்புகளால் தாமதம்
/
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேரோட்டம்: ஆக்கிரமிப்புகளால் தாமதம்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேரோட்டம்: ஆக்கிரமிப்புகளால் தாமதம்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேரோட்டம்: ஆக்கிரமிப்புகளால் தாமதம்
ADDED : ஜூன் 26, 2024 07:03 AM

சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. டி.எஸ்.பி., அரவிந்த்ராஜ், இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி உள்ளிட்டோர் வடம் பிடித்து துவக்கினர்.
நான்கு ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் தேரை இழுத்து செல்ல சிரமப்பட்டனர். ரத வீதிகளில் மின்கம்பங்களை அகற்றி மின் ஒயர்களை தரையில் பதிக்கும் திட்டம் மின்வாரியம் அலட்சியத்தால் 5 ஆண்களுக்கு மேல் கிடப்பில் உள்ளது. இதனால் ஆண்டுதோறும் தேரோட்டத்தின் போது தேரை இழுத்து செல்லும் போது மின் தடை தொடர்கிறது.
இந்நிலையில் கடுமையான ஆக்கிரமிப்புகளால் 4 ரத வீதி குடியிருப்பு, சின்னக்கடை வீதி முதல் மூலக்கடை கறிக்கடை சந்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக குறுகிய துாரத்தை தேர் கடக்க சிரமம் ஏற்பட்டது.
தேர் நிலையை அடைய ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதமானது. பின் சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக பேரூராட்சி, கோயில் நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் வரவில்லை.