sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தரமான கட்டமைப்பு கொண்ட கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள்: மதுரை தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் ஆலோசனை மாணவர்கள் பெற்றோர் மகிழ்ச்சி

/

தரமான கட்டமைப்பு கொண்ட கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள்: மதுரை தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் ஆலோசனை மாணவர்கள் பெற்றோர் மகிழ்ச்சி

தரமான கட்டமைப்பு கொண்ட கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள்: மதுரை தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் ஆலோசனை மாணவர்கள் பெற்றோர் மகிழ்ச்சி

தரமான கட்டமைப்பு கொண்ட கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள்: மதுரை தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் ஆலோசனை மாணவர்கள் பெற்றோர் மகிழ்ச்சி


ADDED : மார் 24, 2024 06:13 AM

Google News

ADDED : மார் 24, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : எந்த படிப்பையும் தரமான கட்டமைப்பு கொண்ட கல்லுாரிகளில் படிக்க வேண்டும் என மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் நடக்கும் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் அஷ்வின் பேசினர்.

'வேலைவாய்ப்பு ஆலோசனைகள்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:

மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் என அனைத்து படிப்புகளுமே பயனுள்ளவையே. ஆனால் 'மூன்றாம் திறமை' என்ற பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் திறமையை வளர்த்துக்கொள்வது அவசியம். உலகம் எதை எதிர்பார்க்கிறதோ அவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல படிப்பை தரமான கல்லுாரிகளில் படிக்க வேண்டும். உதாரணமாக பி.காம்., படிப்பது தவறில்லை. ஆனால் எதற்காக படிக்கிறோம் என்பதை புரிந்துகொண்டு படிக்க வேண்டும். நீங்கள் எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறீர்களோ அதற்கான தகுதியை படிக்கும் போது வளர்த்துக்கொண்டால் தான் இலக்கை அடைய முடியும்.

படிப்பதை ஆழமாக படிக்க கற்றுகொள்ள வேண்டும். எதிர்காலத்திற்கு தேவைப்படும் திறமைகளை கற்றுக்கொடுக்கும் கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள். தற்போதைய உலகம் ஒழுக்கத்துடன் கூடிய திறமையானவர்களை தான் எதிர்பார்க்கிறது. ஏ.ஐ., சைபர் செக்கியூரிட்டி, சிவில், வேளாண்மை என அனைத்துக்கும் எதிர்காலம் உள்ளது. எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறையில் மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடியை முதலீடு செய்யவுள்ளது. அதுசார்ந்த படிப்புகளை படிக்கலாம். படிக்கும் போது ஜெர்மன், ஜப்பான் போன்ற அயல்நாட்டு மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

படித்தால் வேலை நிச்சயம்


'மரைன் கேட்டரிங்' படிப்பு குறித்து சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,) பேராசிரியர் சுரேஷ்குமார்:

மரைன் கேட்டரிங் மூன்று ஆண்டுகள் படிப்பு. பிளஸ் 2வில் எந்த பிரிவு படித்தாலும் இப்படிப்பில் சேரலாம். அதிகம் வேலைவாய்ப்புள்ள படிப்பு இது. கப்பலில் பணியாற்ற வேண்டும் என்பதால் இதற்கு மருத்துவ தகுதிச் சான்று அவசியம். 80 சதவீதம் செய்முறை பயிற்சியாக தான் இருக்கும். சாதாரணமாக படிக்கும் மாணவர்களும் எளிதில் தேர்ச்சி பெற்று நல்ல சம்பளத்தில் வேலையில் சேரலாம். ஆங்கில அறிவு இருந்தால் மருத்துவத்திற்கு இணையான சம்பளம் பெறலாம். பல வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டும். இப்படிப்பை தேர்வு செய்வதற்கு முன் தரமான கட்டமைப்பு உள்ள கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும். தென் மாவட்டங்களில் எஸ்.எல்.சி.எஸ்.,ல் இதுபோன்ற தரமான கட்டமைப்புகள் உள்ளன.

கனவை 'கனெக்ட்' செய்யுங்கள்


சோஹோ மனித வள மேம்பாட்டு அலுவலர் சார்லஸ் பேசியதாவது: என்ன படிக்க வேண்டும் என்பதை விட எப்படி படிக்க வேண்டும் என்பது முக்கியம். பிளஸ் 2 முடித்த மாணவர்களை யாருடனும் ஒப்பிட்டு பேசுவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். என்ன படிக்க வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்க கூடாது. மாணவர்கள் உங்களுக்கு திறமைக்கு ஏற்ப என்ன படிக்க வரும் என்பது குறித்த தேடுதலை மேற்கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கான பலம். 'ஏ டூ இசட்' வரை ஏராள படிப்புகள் உள்ளன. என்ன படிக்க வேண்டும் என்பது குறித்து உங்களுக்கான சிறுவயது கனவை இப்படிப்புகளுடன் கனெக்ட் செய்யுங்கள். அதற்கு ஏற்ப தேர்வு செய்து படித்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம். 50 சதவீதம் படிப்பு, 50 சதவீதம் படிப்பு சார் திறமைகளை வளர்த்துக்கொள்வது என தீர்மானியுங்கள். எதற்குமே பயம் கொள்ளக்கூடாது. துணியாத வரை வாழ்க்கை பயம் காட்டும். துணிந்துவிட்டால் வாழ்க்கை உனக்கு வழிகாட்டும் என்றார்.

உற்சாகம் தந்தது

ஜெ.இ.இ., நீட் நுழைவுத் தேர்வுகள் குறித்து தெரிந்துகொள்ள இந்நிகழ்ச்சிக்கு வந்தேன். ஏராளமான தகவல்கள் கிடைத்தன. அதைத்தாண்டி பிற ஏராளமான படிப்புகளும் உள்ளது குறித்து தெரிந்துகொண்டோம். நிபுணர்கள் பேச்சுடன் எங்களுக்கு தன்னம்பிக்கையும் அளித்துள்ளனர். மனம் உற்சாகம் அடைந்தது.

- கனிஷ்கா, மாணவி, காரைக்குடி

ஆலோசனைகள் அனைத்தும் 'ஜோர்'

பொறியியல் படிப்புகள் குறித்து சந்தேகங்கள் இருந்தன. எந்த படிப்பை எப்படி, எங்கே தேர்வு செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைத்தது. கட்டமைப்புகள் கொண்ட கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும். சேர்வதற்கு முன் கல்லுாரிகளின் தரம் குறித்து விசாரிக்க வேண்டும் போன்றவை பயனுள்ள ஆலோசனைகள். பல சந்தேகங்களுக்கு தீர்வாக தினமலர் வழிகாட்டி அமைந்தது. நன்றி தினமலர்.

- ராஜபிரியா, மாணவி, பேரையூர்

கல்லுாரிகளை தேர்வு செய்ய டிப்ஸ்

என் மகள் பிளஸ் 2 முடித்த நிலையில் பொறியியல் படிப்புகளில் எந்த பிரிவை தேர்வு செய்யலாம் என்பது குறித்து இந்நிகழ்ச்சிக்கு வந்தேன். தெளிவு கிடைத்தது. அதையும் தாண்டி படிக்கும் போதே எதிர்காலத்திற்கு ஏற்ற திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆன்லைன் படிப்புகள் குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது. கல்வி அரங்குகளையும் சுற்றிப் பார்த்தோம். பட்ஜெட்டுக்கு ஏற்ற கல்லுாரிகளை தேர்வு செய்யும் தெளிவும் கிடைத்தது.

- சங்கீதா, பெற்றோர், மதுரை

மதிப்பெண்ணுக்கு ஏற்ற படிப்புகள்

மருத்துவம், பொறியியல் படிப்புகளை தாண்டி ஏராளமான படிப்புகள் குறித்து தெரிந்துகொண்டோம். மதிப்பெண்களுக்கு ஏற்ப இப்படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்யலாம் என்ற ஐடியா கிடைத்தது. குறிப்பாக கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் பேச்சில் பல்வேறு தகவல்கள் கிடைத்தது. வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் ஆலோசித்து படிப்பு, கல்லுாரியை தேர்வு செய்யும் முடிவு எடுப்போம்.

- சவுந்தர்யா, பெற்றோர், மதுரை






      Dinamalar
      Follow us