/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கபடி போட்டியில் சிட்டி போலீஸ் வெற்றி
/
கபடி போட்டியில் சிட்டி போலீஸ் வெற்றி
ADDED : ஆக 14, 2024 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டம், யானைமலை ஒத்தக்கடையில் உள்ள காளியம்மன் கோயில் காளை நினைவாக ஒத்தக்கடை கிராம இளைஞர்கள் சார்பில் தென் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற அணிகளில் மதுரை சிட்டி போலீஸ் கபடி அணியினர் முதல் பரிசை வென்றனர். சிறப்பு விருந்தினர்களாக ஒத்தக்கடை உட்பட பல்வேறு ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.