ADDED : ஜூலை 24, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி டி.இ.எல்.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எம்.எல்.ஏ., மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் ரூ. 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் திறப்பு விழா பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ் தலைமையில் நடந்தது.
தாளாளர் தங்கப்பழம் ஜான் ஞானபிரகாசம், விருதுநகர் மறைமாவட்டத் தலைவர் ஜான்ராஜாசிங், கல்விக்கழகத் தலைவர் குணாளன்பாக்கியராஜ், பொருளாளர் ஞானபிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்.எல்.ஏ., அய்யப்பன் திறந்து வைத்தார். தலைமை ஆசிரியர் மார்க்ரெட் கிரேசீலியா நன்றி கூறினார்.

