ADDED : செப் 15, 2024 06:08 AM
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான டென்னிஸ் போட்டிகளை கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா துவக்கி வைத்தார். ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க மாநில துணைத்தலைவர் சோலைராஜா கலந்து கொண்டனர். சிலம்பப் போட்டிகளை போலீஸ் உதவி கமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் மயில் துவக்கி வைத்தனர்.
ஆடவர் போட்டி முடிவுகள்
செஸ் போட்டியில் யஸ்வந்த் முதலிடம், மாதவ கிருஷ்ணன் 2ம் இடம், கதிர்காமன் 3ம் இடம் பெற்றனர். கிரிக்கெட் போட்டியில் கிரேஸ் மெட்ரிக் பள்ளி முதலிடம், லீ சாட்லியர் பள்ளி 2ம் இடம், கல்வி இன்டர்நேஷனல் பள்ளி 3ம் இடம் பெற்றன.
சிலம்பப் போட்டி 45 - 55 கிலோ பிரிவில் தனதருஷ்ண் முதலிடம், ஆறுமுக ராஜவேல் 2ம் இடம், சக்திவேல் 3ம் இடம் பெற்றனர். 56 - 65 கிலோ பிரிவில் சிவனேஸ்வரன், தர்வின் பிரபு, தீபன், 66 -- 75 கிலோ பிரிவில் கிருத்திக்ஸ், சொக்கலிங்கம், சிவா கிருஷ்ணன், 75 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் ஜெகதீஸ்வரன், சேவக், ரமேஷ் பிரபாகரன் ஆகியோரும் கேரம் போட்டியில் முகமது பாசித் கான், ஆகாஷ், அபிநவ் கார்த்திக் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
ஹாக்கி போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி பள்ளி, திருநகர் இந்திராகாந்தி நினைவு மெட்ரிக் பள்ளி, பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை பள்ளி அணி முதல் மூன்று இடங்களை வென்றன. கபடி போட்டியில் எம்.எம். மேல்நிலைப் பள்ளி, ஏ. வெள்ளாளப்பட்டி அரசுப் பள்ளி, ஐயப்பன்காரன்பட்டி அரசு கள்ளர் பள்ளி, கூடைபந்து போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி பள்ளி, செயின்ட் பிரிட்டோ பள்ளி, கல்வி இன்டர்நேஷனல் பள்ளி, வாலிபால் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி பள்ளி ஏ அணி, பி அணி, சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளிகள் முதல் மூன்று இடங்களைப் பெற்றன.
கோ கோ போட்டியில் நாகமலை புதுக்கோட்டை எம்.என்.யு.ஜெ., பள்ளி, எம்.சி. பள்ளி, வி.எச்.என். பள்ளி, ஹேண்ட்பால் போட்டியில் தனபால் பள்ளி, ரயில்வே இருபாலர் பள்ளி, தனபால் பள்ளி பி அணி, கால்பந்து போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி பள்ளி, டி நோபிலி பள்ளி, செயின்ட் மேரீஸ் பள்ளி முதல் மூன்று இடங்களைப் பெற்றன.
மகளிர் போட்டி முடிவுகள்
செஸ் போட்டியில் சஹானா முதலிடம், சருதர்ஷினி 2ம் இடம், பூர்விகா 3ம் இடம் பெற்றனர். கேரம் ஒற்றையர் பிரிவில் மித்ரா, மெஜீலா, ஜெயஸ்ரீ, இரட்டையர் பிரிவில் மித்ரா, ஹரீஷ்மா ஜோடி, ஜெயஸ்ரீ, பிரித்திகா ஜோடி, சக்தி புரோஜோதா ஜோடி முதல் மூன்று இடங்களை வென்றனர். டேபிள் டென்னிஸ் போட்டி ஒற்றையர் பிரிவில் வர்ஷா, ஷாமினா சாய், அரந்தனா, இரட்டையர் பிரிவில் அரந்தனா, சிவராத்மிகா ஜோடி, ஷாமினா சாய், ஹர்ஷிகா ஜோடி, வர்ஷா, மாயா அஸ்வந்த் ஜோடி முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். கிரிக்கெட் போட்டியில் பொன்முடியார் மாநகராட்சி பள்ளி ஏ அணி முதலிடம், ஸ்ரீராம் நல்லமணி பள்ளி 2ம் இடம், ஒய்.ஒத்தகடை அரசுப் பள்ளி 3ம் இடம் பெற்றன.
நீச்சல் போட்டி 50 மீட்டர் ப்ரீஸ்டைலில் தீக்ஷிதா முதலிடம், ஜெதன்பியூலா ராணி 2ம் இடம், பூர்வஜா 3ம் இடம் பெற்றனர். பிரெஸ்ட் ஸ்ட்ரோக்கில் எதீனா ரேச்சல், கிருத்திகா, ஷ்னோலா அப்ரியானா, பேக் ஸ்ட்ரோக்கில் தன்யாஸ்ரீ, தமிழினி, முத்துமாரி முதல் 3 இடங்களைப் பெற்றனர். பட்டர் பிளை பிரிவில் பாலா தீபிகா, 100, 400 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் அன்னபூர்ணிமா, பேக் ஸ்ட்ரோக்கில் தமிழினி, பிரெஸ்ட் ஸ்ட்ரோக்கில் எதீனா ரேச்சல், பட்டர் பிளை பிரிவு, 200 மீட்டர் ஐ.எம். பிரிவில் ரோஷினி முதலிடம் பெற்றனர்.
சிலம்பப் போட்டியில் சுஜிதா முதலிடம், ஹாசினி 2ம் இடம், தனுஸ்ரீ 3ம் இடம் பெற்றனர். சிலம்பம் 51 - 60 கிலோ பிரிவில் தமிழ் வைசாலி, கவுசிகா, நந்தினி மகாலட்சுமி, 61 - 70 கிலோ பிரிவில் அக் சயா, லதிகா, கீர்த்தனா, 70 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் கார்த்திகை செல்வி, பால் ஜோஸ்லின்ராஜ், அக்ஷயா முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
ஹாக்கி போட்டியில் கப்பலுார் அரசுப் பள்ளி ஏ அணி முதலிடம், வாடிப்பட்டி அரசுப் பள்ளி 2ம் இடம், அரசு கள்ளர் பள்ளி 3ம் இடம் பெற்றன. கபடி போட்டியில் திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா, என்.எஸ்.எஸ்.பி. மாநகராட்சி பள்ளி, ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி, கூடைபந்து போட்டியில் நிர்மலா பள்ளி, மகபூப்பாளையம் அரசுப் பள்ளி, செயின்ட் ஜோசப் பள்ளி, வாலிபால் போட்டியில் அழகர்கோவில் சுந்தரேஸ்வரா பள்ளி, ஓ.சி.பி.எம். பள்ளி, நிர்மலா பள்ளி, ஹேண்ட் பால் போட்டியில் ரயில்வே இருபாலர் பள்ளி, நிர்மலா பள்ளி, செயின்ட் ஜான் மெட்ரிக் பள்ளி, கால்பந்து போட்டியில் நிர்மலா பள்ளி, சீத்தாலட்சுமி பள்ளி ஏ அணி, ஸ்ரீராம் நல்லமணி பள்ளி ஏ அணி முதல் மூன்று இடங்களைப் பெற்றன.