நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 7 விவசாயிகளின் 9 ஆயிரத்து 45 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. 14 வியாபாரிகள் பங்கேற்றனர். மட்டையுடன் கூடிய தேங்காய் ஒன்று ரூ.5.30 முதல் ரூ.12.25 வரை விலை போனது. ஏலம் மூலம் ரூ.80 ஆயிரத்து 827க்கு வர்த்தகம் நடந்தது.
மேலும் 11 விவசாயிகளின் 649 கிலோ கொப்பரை ஏலத்தில் 6 வியாபாரிகள் பங்கேற்றனர். கிலோ ரூ.62.10 முதல் ரூ.96.10 வரை விலை போனது.ரூ.49ஆயிரத்து 921க்கு வர்த்தகம் நடந்தது.