மதுரை : மதுரை பாத்திமா கல்லுாரி விழா முதல்வர் செலின்சகாய மேரி தலைமையில் நடந்தது. உதவிப் பேராசிரியர் ஆஷ்னட் மேரி வரவேற்றார்.
உதவிப் பேராசிரியர் சகாயமேரி சோபியா தொகுத்து வழங்கினார். புனித ஜோசப் குழுமத்தின் மாநில தலைவர் லில்லி தொக்கநாத்து, அரவிந்த் கண் மருத்துவக் குழும எமிரட்டஸ் இயக்குனர் நாச்சியார் பங்கேற்றனர்.
லில்லி தொக்கநாத்து பேசுகையில், ''நன்றியுணர்வு, தன்னம்பிக்கை, மன உறுதி மாணவர்களுக்கு அவசியம். நேர்மையும் தன்னம்பிக்கையும் உலகளாவிய மாற்றத்திற்கு வழி வகுக்கும்.
சமூக மாற்றத்திற்கும் அழைத்துச் செல்லும்'' என்றார்.
டாக்டர் நாச்சியார் பேசுகையில், ''பெண்ணின் திறமையை வெளிக்கொணர வாய்ப்பளித்தால் சாதிப்பர். பெற்றோர், பெரியோரை மதியுங்கள். பாரம்பரியம், பண்பாட்டை கடைபிடியுங்கள்.
சிறந்த நட்பைத் தேர்வு செய்யுங்கள். நல்ல குறிக்கோளுடன் வாய்ப்பை பயன்படுத்துங்கள்'' என்றார்.
சிறந்த மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். கலைநிகழ்ச்சி நடந்தது. உதவிப் பேராசிரியர் பிரியா நன்றி கூறினார்.
செயலர் பிரான்சிஸ்கா புளோரா, துணைமுதல்வர்கள் பாத்திமா மேரி, ஜெனிட்டா ராணி, டயானா கிறிஸ்டி, மீனாட்சி பங்கேற்றனர்.

