ADDED : மார் 04, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி இளங்கலை கணினி அறிவியல் தகவல் தொழில்நுட்பவியல், தரவு அறிவியல் துறை சார்பில் தகவல் தொழில்நுட்ப விரிவாக்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார்.
நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் பொன்னி வரவேற்றார். கணினி அறிவியல் துறை தலைவர் ரோகிணி அறிமுக உரையாற்றினார். கேட்வே சாப்ட்வேர் துர்காதேவி, பயிற்சியாளர் பவித்ரா பேசினர். பேராசிரியர் வசந்தா தேவி நன்றி கூறினார்.