/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'சென்டிமென்ட்'டாக பிரசாரம் துவக்கிய கம்யூ., வேட்பாளர்
/
'சென்டிமென்ட்'டாக பிரசாரம் துவக்கிய கம்யூ., வேட்பாளர்
'சென்டிமென்ட்'டாக பிரசாரம் துவக்கிய கம்யூ., வேட்பாளர்
'சென்டிமென்ட்'டாக பிரசாரம் துவக்கிய கம்யூ., வேட்பாளர்
ADDED : மார் 28, 2024 06:29 AM
மதுரை: கோயில், சென்டிமென்ட் போன்ற விஷயங்களுக்கு எதிரான தி.மு.க., கூட்டணியில் உள்ள மதுரை மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் வெங்கடேசன் சென்டிமென்ட் பார்த்தும், கோயில் முன் இருந்தும் தனது முதல் பிரசாரத்தை துவக்கினார்.
கடந்த லோக்சபா தேர்தலில் வைகை ஆற்றில் மலர்துாவி வணங்கிய பின் வெங்கடேசன் பிரசாரம் துவக்கி வெற்றி பெற்றார். அந்த சென்டிமென்ட் படி தற்போதும் வைகையில் மலர்துாவி நேற்று பிரசாரத்தை துவக்கினார். அவருடன் அமைச்சர் தியாகராஜன், தி.மு.க., நகர் செயலாளர் தளபதி, மேயர் இந்திராணி பொன்வசந்த், ம.தி.மு.க., எம்.எல்.ஏ., பூமிநாதன் ஆகியோரும் மலர் துாவி வணங்கினர். வெங்கடேசன் தமது பிரசாரத்தை சிம்மக்கல் தைக்கால் காசிவிஸ்வநாதர் கோயிலில் இருந்தும் துவக்கினார். தி.மு.க., கம்யூ.,ல் பகுத்தறிவு பேசி கோயில், சென்டிமென்ட்டிற்கு எதிராக இருப்பர். ஆனால் வேட்பாளர் வெங்கடேசன், சென்டிமென்ட் பார்த்ததும், கோயில் முன் இருந்து பிரசாரத்தை துவக்கியதையும் 'தேர்தலுக்கானது' என மக்கள் கருதுகின்றனர்.