நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஆலத்துாரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார்.
கலெக்டர் சங்கீதா, வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மண்டலத் தலைவர் வாசுகி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஷீலா சுந்தரி கலந்து கொண்டனர். 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.