ADDED : மே 06, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை முனிச்சாலை, ஸ்ரீமந் நாயகி சுவாமிகள்வேதபாடசாலையில் மாணவர்களுக்கான மந்திர வகுப்பு நிறைவு விழா நடந்தது.
ஸ்ரீமந் நாயகி இயக்கத் தலைவர் பிரகாஷ் குமார் தலைமை வகித்தார். செயலாளர் பிரேம் குமார், பொருளாளர் ஸ்ரீநிவாசன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுச் செயலாளர் குபேந்திரன், பாடசாலை ஆசிரியர் ராமாச்சாரி குருஜி உட்பட பலர் பேசினர். நிர்வாக அதிகாரி சாரங்கன் நன்றி கூறினார்.
ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் ஆன்மிக இளைஞர் எழுச்சி இயக்க நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.