ADDED : ஜூலை 29, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் டேட்டா மேலாண்மை அமைப்புகளில் (டி.பி.எம்.எஸ்.,) டேட்டா ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி முதல்வர் அப்துல் காதிர் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர் மேத்யூஸ்ராஜ், 'தற்போதைய நவீன நிறுவனங்களில் டேட்டா ஒருமைப்பாடு பாதுகாப்பின் முக்கிய பங்கு' பற்றி பேசினார்.
பேராசிரியர்கள் ராமநாதன், சசிகலா, நந்தினி, மேகலா, கவிதா, பிரவீணா, சீனிவாசன், புவனேஸ்வரி, துளசிராம் உட்பட பலர் பங்கேற்றனர்.