நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே காந்தி கிராமத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி ஜூலை 30 ல் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர்.
ஆக.6 மாலை முதல் காலயாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.