/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழுவை கட்டுப்படுத்துங்க
/
மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழுவை கட்டுப்படுத்துங்க
மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழுவை கட்டுப்படுத்துங்க
மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழுவை கட்டுப்படுத்துங்க
ADDED : ஆக 01, 2024 04:53 AM
மதுரை: டி.கல்லுப்பட்டி வட்டார விவசாயிகள் மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி உற்பத்தி பாதிப்பை தவிர்க்க வேண்டும் என உதவி இயக்குநர் விமலா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு உழ வேண்டும். அதிகளவு தழைச்சத்து இடக்கூடாது. விதைப்பின் போது வரப்பு ஓர பயிராக வயலைச் சுற்றிலும் தட்டைப்பயறு, எள், சூரியகாந்தி, துவரை, தீவனச்சோளம் ஏதாவது ஒன்றை பயிரிடலாம்.
விவசாயிகள் ஒரே நேரத்தில் விதைப்பு மேற்கொள்ள வேண்டும். இறவை மக்காச்சோளத்திற்கு வரிசைக்கு வரிசை 60 செ.மீ., பயிருக்கு பயிர் 25 செ.மீ., இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மானாவாரியில் வரிசைக்கு வரிசை 45 செ.மீ., பயிருக்கு பயிர் 20 செ.மீ., இடைவெளி தேவை. விதைப்பிற்கு பின் ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து ஆண் அந்துப் பூச்சிகளை அழிக்கலாம்.
15 முதல் 20 நாட்கள் பயிரில் பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்த குளோரான்டிரனில் புரோல் 18.5 எஸ்.சி. மருந்தை லிட்டருக்கு 0.4 மில்லி அளவில் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். 35 - 40 நாள் வயது பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த மெட்டாரைசியம் அனிசோபிளே மருந்தை ஏக்கருக்கு ஒரு கிலோ அளவில் பயன்படுத்த வேண்டும்.
அறுபது நாள் பயிரில் கதிர் உருவாகும் நேரத்தில் ஸ்பினிடோரம் அல்லது இமாமெக்டின் பென்சோவேட் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். மெட்டாரைசியம் அனிசோபிளே உயிர் பூஞ்சாண மருந்து ஒரு கிலோ ரூ.135க்கு வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கிறது என்றார்.