/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நடிகை நமீதாவிடம் மதச்சான்று கேட்டதாக சர்ச்சை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் மீது புகார்

ADDED : ஆக 27, 2024 01:54 AM

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த நடிகை நமீதாவிடம் மதச் சான்று கேட்டதாக கோயில் ஊழியர்கள் மீது புகார் எழுந்தது. 'மனவருத்தத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நமீதா வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
நடிகையும், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா, கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நேற்று தரிசனம் செய்ய சென்றார். ஊழியர்கள் அவரிடம் பாதுகாப்பு கருதி சில விபரங்களை கேட்டுள்ளனர். இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த நமீதா மதுரையில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த நிலையில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
அதில் கோயில் பெண் அலுவலர் உள்ளிட்டோர் 'எங்களிடம் ஹிந்து மதத்திற்கான சான்றிதழ் உள்ளதா' எனக் கேட்டனர். நான் ஒரு நடிகை. திருப்பதி உள்ளிட்ட கோயில்களுக்கு சென்றுள்ளேன். என் குழந்தைக்கு ஹிந்து பெயர் (கிருஷ்ணா) தான் வைத்துள்ளேன். குங்குமம் நெற்றியில் வைத்துவிட்டுத் தான் உள்ளே செல்ல அனுமதித்தனர். இதுவரை எந்த கோயிலிலும் என்னிடம் இதுபோன்று ஊழியர்கள் நடந்து கொண்டதில்லை. ஊழியர்களுக்கு யாரிடம் எப்படி பேசுவது எனத் தெரியவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.
கோயில் ஊழியர்கள் கூறுகையில், 'முகக்கவசம் அணிந்து வருவோரிடம் பாதுகாப்பு கருதி இதுபோல் கேட்பது நடைமுறை தான். அவர் நடிகை என்பது முன்கூட்டியே தெரியாது' என்றனர்.