தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கொலை முயற்சி வழக்கில் தண்டனை

கொலை முயற்சி வழக்கில் தண்டனை

கொலை முயற்சி வழக்கில் தண்டனை


UPDATED : ஜூன் 17, 2026 10:12 PM

ADDED : ஜூன் 17, 2026 10:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 10:12 PM ADDED : ஜூன் 17, 2026 10:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:சோழவந்தான் அருகே சித்தாலங்குடியில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு தாதக்கவுண்டன்பட்டி முத்துப்பாண்டி43, சென்றார். குறித்த நேரத்திற்கு முன்பாக ஏன் கடையை மூடுகின்றீர்கள் என விற்பனையாளர் பாண்டியிடம் கேள்வி எழுப்பினார். பாண்டி பணி நேரம் முடிந்துவிட்டது என்பதால் மூடினோம் என்றார். வாக்குவாதத்தில் அவரை அரிவாளால் தாக்கியதில் காயம் ஏற்பட்டது.

முத்துப்பாண்டி மீது சோழவந்தான் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்தனர். மதுரை கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அசன் முகமது விசாரித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் பட்டுராஜன் ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: முத்துப்பாண்டிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us