நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் 14வது பட்டமளிப்பு விழா நடந்தது. மியூசிய பொருளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார். முதல்வர் தேவதாஸ் வரவேற்றார்.
மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், யோகா படிப்பில் இளநிலை, முதுகலை பட்டயப் படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசுகையில், ''உலக மக்களுக்கு யோகாவை இந்தியா வழங்கியுள்ளது. யோகாவை அவசரகதியில் செய்யாமல் நிதானமாக செய்தால் தான் அதன் நன்மைகளை முழுமையாக பெற முடியும்'' என்றார்.
காப்பாட்சியர் நடராஜன், மதுரை சமுதாயக் கல்லுாரி தலைவர் விஜய சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். யோகா ஆசிரியை நந்தினி நன்றி கூறினார். யோகா ஆசிரியை பிரேமலதா தொகுத்து வழங்கினார்.