நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியின் 57வது பட்டமளிப்பு விழா செயலாளர் நாராயணன் தலைமையில் நடந்தது. முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். முன்னாள் அரசு சிறப்பு செயலர் கருணாகரன் 638 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
அவர் பேசுகையில் ''பட்டதாரிகள் தகுந்த குறிக்கோளை உருவாக்கி, சோம்பலும் தயக்கமும் இன்றி அதனை அமைக்க முயற்சிக்க வேண்டும்.
வெற்றியாளர்களின் வெற்றிக்கு காரணம் தன்னம்பிக்கை, அர்ப்பணிப்போடு கூடிய விடாமுயற்சியே ஆகும்'' என்றார்.
வேதியியல் துறை இணைப் பேராசிரியர் மோகன்தாஸ், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

