நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை யாதவர் கல்லுாரியில் 45வது பட்டமளிப்பு விழா முதல்வர்ராஜூ தலைமையில் நடந்தது. தலைவர் ஜெயராமன், செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
முன்னாள் செயலாளர் நவநீதகிருஷ்ணன் பட்டம் வழங்கி பேசுகையில் மாணவர்கள் அரசுக்கு உதவிடும் வகையில் முன்னேற வேண்டும். திட்டமிடல், விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்க முடியும். அப்துல் கலாம் கூறியது போல் மாணவர்கள் கனவு காணுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள். கடைசிவரை பெற்றோரை மதியுங்கள் என்றார். 801 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
துணைத் தலைவர் சிவராமகிருஷ்ணன், இணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர்கிருஷ்ணவேல், தேர்வாணையர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

