ADDED : ஜூலை 28, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் மாநகராட்சி பணிகளை நகராட்சி நிர்வாக இணை கமிஷனர் ஷேக் அப்துல் ரகுமான் ஆய்வு செய்தார்.
கண்ணனேந்தல் வார்டு அலுவலக பணி, சக்தி நகர் கற்பக விநாயகர் கோயில் தெரு திடக்கழிவு மேலாண்மை, நாகனாகுளம் நுண்ணுயிர் உரக்கூடத்தில் மட்கும் குப்பையிலிருந்து உரம் தயாரித்தல், மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் துாய்மைப் பணி, வெள்ளக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பையை தரம் பிரித்தல், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் குறித்து ஆய்வு செய்தார்.
மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, நகர்நல அலுவலர் வினோத்குமார், அலுவலர்கள் உடனிருந்தனர்.