/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அதிகாரிகளை ஒருமையில் பேசிய கவுன்சிலர் 'சஸ்பெண்ட்' மேயர் நடவடிக்கை
/
அதிகாரிகளை ஒருமையில் பேசிய கவுன்சிலர் 'சஸ்பெண்ட்' மேயர் நடவடிக்கை
அதிகாரிகளை ஒருமையில் பேசிய கவுன்சிலர் 'சஸ்பெண்ட்' மேயர் நடவடிக்கை
அதிகாரிகளை ஒருமையில் பேசிய கவுன்சிலர் 'சஸ்பெண்ட்' மேயர் நடவடிக்கை
ADDED : ஜூலை 01, 2024 04:17 AM
மதுரை : மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் அதிகாரிகளை ஒருமையில் பேசிய சுயேச்சை கவுன்சிலர் ஜெயசந்திரனை 'சஸ்பெண்ட்' செய்து மேயர் இந்திராணி பொன்வசந்த் உத்தரவிட்டார். அடுத்து நடக்கும் இரண்டு கூட்டங்களில் கவுன்சிலர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் ஜூன் 28 ல் நடந்தது.
இதில் 62வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ஜெயசந்திரன் பேசும்போது அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அதிகாரிகளை ஒருமையில் பேசினார். கண்டனம் தெரிவித்த அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்ட நிகழ்வு பாதித்தது.
கமிஷனர் தினேஷ்குமார் அழைப்பின் பேரில் மீண்டும் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஜெயசந்திரனின் செயலை அப்போதே கண்டித்த மேயர், 'சபை மரபை மீறும் வகையில் பேசக் கூடாது' என அறிவுரை வழங்கினார். பின் கவுன்சிலர் கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்தக் கவுன்சிலருக்கு மேயர் அனுப்பிய உத்தரவில் 'கூட்ட நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்தியும், மன்ற அலுவல்களில் இடைமறித்தும், ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பேச்சில் பயன்படுத்தியும் அதை நீங்கள் திரும்ப பெற மறுத்துவிட்டீர்கள். நகர்ப்புற உள்ளாட்சி விதிப்படி உங்களை 'சஸ்பெண்ட்' செய்து, 2 சாதாரண கூட்டங்களில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேயர் நடவடிக்கையை கவுன்சிலர்கள், அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.