/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொடைக்கானல் செல்ல ஆர்வம் காட்டாத கவுன்சிலர்கள் காத்தாடுது பயிற்சி வகுப்புகள்
/
கொடைக்கானல் செல்ல ஆர்வம் காட்டாத கவுன்சிலர்கள் காத்தாடுது பயிற்சி வகுப்புகள்
கொடைக்கானல் செல்ல ஆர்வம் காட்டாத கவுன்சிலர்கள் காத்தாடுது பயிற்சி வகுப்புகள்
கொடைக்கானல் செல்ல ஆர்வம் காட்டாத கவுன்சிலர்கள் காத்தாடுது பயிற்சி வகுப்புகள்
ADDED : மார் 07, 2025 04:43 AM
மதுரை: மதுரை மாநகராட்சி கவுன்சிலர்களுக்காக கொடைக்கானலில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி வகுப்புகளில் இதுவரை 3 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இதனால் பயிற்சி வகுப்பு காத்தாடுகிறது.
தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் சார்பில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான கடமைகள், பொறுப்புகள், அலுவலக நடைமுறைகள், ஆளுமை திறமைகளை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சி வகுப்புகளை அளித்து வருகிறது. இந்நிறுவனம் மூலம் மதுரை மாநகராட்சியின் 100 கவுன்சிலர்களுக்கும் 7 நாட்கள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேயர், துணைமேயர் தவிர மார்ச் 4, 6, 18, 20ல் நடக்கும் பயிற்சியில் பங்கேற்க வேண்டிய கவுன்சிலர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் முதல் நாள் பயிற்சியில் 1 கவுன்சிலரும், 2வது நாளில் 2 பேரும் மட்டும் பங்கேற்றதால் நகரியல் நிறுவன பயிற்சியாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
கவுன்சிலர்கள் கூறியதாவது: பயிற்சி குறித்து முறையான அழைப்பு இல்லை. 100 கவுன்சிலர்களில் 50 பேர் பெண்கள். 'மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு நீங்களே வர வேண்டும். அங்கு தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடன் யாரையும் அழைத்துவர அனுமதியில்லை' என கூறிவிட்டனர். இதனால் பெரும்பாலான கவுன்சிலர்கள் செல்லவில்லை. பெண் கவுன்சிலர்கள் தனியாக சென்றால் அவர்களுக்கு யார் பாதுகாப்பு. இதுபோன்ற பல குளறுபடிகளால் இப்பயிற்சிக்கு செல்ல ஆர்வம் இல்லை. மேலும் பிற மாநகராட்சிகளில் இப்பயிற்சியில் பங்கேற்றுவர கவுன்சிலர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. ஆனால் மதுரையில் அதுபோல் இல்லை என்றனர்.
இதற்கிடையே அனைத்து கவுன்சிலர்களும் பயிற்சியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.