/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி கவுன்சிலர் மனு
/
தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி கவுன்சிலர் மனு
ADDED : ஜூலை 24, 2024 05:42 AM
திருப்பரங்குன்றம் : மாநகராட்சி மேற்கு மண்டல மக்கள் குறைதீர் கூட்டம் திருப்பரங்குன்றம் அலுவலகத்தில் நடந்தது.
மேயர் இந்திராணி பொன் வசந்த், கமிஷனர் தினேஷ் குமார், மண்டல தலைவர் சுவிதா மனுக்கள் பெற்றனர்.
'சேமட்டான் குளம் கண்மாயை காப்பாற்றுங்கள்' என தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியை கவுன்சிலர் இந்திரா காந்தி, மேயர், கமிஷனரிடம் காண்பித்து, 'கண்மாயை நீர்வளத் துறையினர் கைவிட்டு விட்டனர். மாசு படிந்து கிடக்கும் தண்ணீரால் சுற்றியுள்ள மக்கள் அவதியுறுகின்றனர்.
கண்மாயை மாநகராட்சி துார்வார வேண்டும்' என்றார். கவுன்சிலர் ரவிச்சந்திரன், பசுமலை மயானத்தை சீரமைப்புடன் திருப்பரங்குன்றத்தில் மின் மயானம் அமைக்கப்பட வேண்டும் என்றார். கவுன்சிலர் சிவசக்தி உள்ளிட்டோர் தங்கள் பகுதி குறைகளை சுட்டிக்காட்டி மனு அளித்தனர்.
கமிஷனர் கூறுகையில், ''மின் மயானம் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து மயானங்களும் சீரமைக்கப்படும். சேமட்டன் குளம் கண்மாயை முழுமையாக துார்வாரி கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
துணைமேயர் நாகராஜன், தலைமை பொறியாளர் ரூபன், உதவி கமிஷனர் ராதா பங்கேற்றனர்.