ADDED : மே 10, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மேலுார் கொட்டக்குடி கிராமத்தில் மதுரை விவசாய கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் பயிர் மருத்துவர் செயலி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.
விவசாயிகள் சந்திக்கும் பயிர்களுக்கான பிரச்னைகளை கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிப்பது, உற்பத்தித் திறனை வழங்குவது பற்றிய அறிவை இந்தச் செயலி வழங்குவதாக மாணவர்கள் திருமலை, காவியன், நரேன், பவன்குமார், யோகேஷ் தெரிவித்தனர்.