/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மகசூலை பெருக்கும் திருந்திய நெல் சாகுபடி
/
மகசூலை பெருக்கும் திருந்திய நெல் சாகுபடி
ADDED : ஏப் 29, 2024 05:37 AM
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி மாணவர்கள், மேலுார் பகுதியில் ஊரக வேளாண்மைப் பணி அனுபவத்திட்டம் நடத்தி வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் மாணவன் சோலேஷ் அ.வள்ளாலப்பட்டி கிராம விவசாயிகளோடு கலந்துரையாடுதல், அங்கு வளர்க்கப்படும் பயிர் முறைகளை பதிவு செய்தல், கிராம மதிப்பீடு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக 'திருந்திய நெல் சாகுபடி' என்னும் தலைப்பில் விவசாயிகளுக்கு விளக்கக் கூட்டம் நடத்தினார்.
அவர் பேசியதாவது: திருந்திய நெல் சாகுபடி, நெல்லின் மகசூலை அதிகப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நவீன முறை.
இதில் நெல்லுக்கு வேண்டிய விதையளவு ஏக்கருக்கு 7 - 8 கிலோ எனில் ஒரு குத்துக்கு ஒற்றை நாற்றும், 12 -15 கிலோ எனில் ஒரு குத்துக்கு இரண்டு நாற்றும் நெற்பயிர் வைக்க வேண்டும்.
நாற்றுகள் குறிப்பிட்ட அளவு உயரத்தை அடைந்ததும் 15வது நாளில் சதுர நடவுப்படி அதிக இடைவெளி விட்டு நட வேண்டும். நிலத்தை காயவிட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தேவைக்கு ஏற்ப உரமிட வேண்டும் என்றார்.

