ADDED : மே 05, 2024 04:00 AM

கொட்டாம்பட்டி, : உதினிபட்டியில் 7 நாட்களாக மின் சப்ளை இல்லாததால் பயிர்கள் கருகி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
விவசாயி அருணாசலம்: பலஆண்டுகளுக்கு முன் ஊன்றப்பட்ட மின்கம்பங்கள் என்பதால் சாய்ந்தும், மின் கம்பிகள் தாழ்வாகவும் உள்ளது. அதனால் காற்று வீசும்போது கம்பிகள் உரசுவதால் மின்சப்ளை துண்டிக்கப்படுகிறது. மின்வாரியத்தில் ஆள் பற்றாக்குறையால் சீரமைக்க முடியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். கூடுதல் ஆட்களை கொண்டு சரி செய்ய கட்டணமாக ரூ.10 ஆயிரம் வரை வசூலித்தனர். ஆனால் 7 நாட்களாக மின்சப்ளை முற்றிலும் இல்லை. பயிர்கள் கருகிவிட்டன என்றார்.
மின் உதவிபொறியாளர் பாலமுருகன் கூறுகையில் ''மின்சாரம் முற்றிலும் இல்லை என்பது தவறு. குறைந்தளவு மின்சாரம் வருவதால் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படவுள்ளது. மின்கம்பிகள் மீது தென்னை மரத்தின் கிளைகள் விழுவதால் ஏற்படும் மின்தடையை சரி செய்து வருகிறோம் என்றார்.