/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் குடும்ப பிரச்னையை விசாரித்த எஸ்.எஸ்.ஐ.,க்கு வெட்டு
/
மதுரையில் குடும்ப பிரச்னையை விசாரித்த எஸ்.எஸ்.ஐ.,க்கு வெட்டு
மதுரையில் குடும்ப பிரச்னையை விசாரித்த எஸ்.எஸ்.ஐ.,க்கு வெட்டு
மதுரையில் குடும்ப பிரச்னையை விசாரித்த எஸ்.எஸ்.ஐ.,க்கு வெட்டு
ADDED : ஆக 15, 2024 04:49 AM

மதுரை : மதுரையில் குடும்ப பிரச்னையை விசாரிக்க சென்ற சிறப்பு எஸ்.ஐ., நத்தர் ஒலியை அரிவாளால் வெட்டிய கூழ் கடை வியாபாரி சங்கையா 35, கைது செய்யப்பட்டார்.
மதுரை மாட்டுத்தாவணி போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ., நத்தர் ஒலி. நேற்றுமுன்தினம் இரவு ரோந்து பணியில் இருந்தபோது உத்தங்குடியில் குடும்ப பிரச்னையில் தகராறு நடப்பதாக '100'க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நத்தர் ஒலி சென்றார்.
அங்கு சங்கையா என்பவர் அவரது அம்மா கண்ணாமணியுடன் மது போதையில் தகராறு செய்து கொண்டிருந்தார்.
விசாரணையில், அவரது மனைவி சுவேதா குடும்ப பிரச்னையில் கோபித்துக்கொண்டு ராமநாதபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றது தெரிந்தது. மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு தகராறு செய்தவரை கண்டித்த நத்தர் ஒலி, ஸ்டேஷனிற்கு வந்து புகார் கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.
ஆனாலும் சங்கையா தொடர்ந்து அவரது அம்மாவுடன் தகராறு செய்ததோடு அரிவாளால் வெட்ட முயன்றார். இதை தடுத்த நத்தர் ஒலிக்கு உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சங்கையாவை போலீசார் கைது செய்தனர்.