ADDED : ஏப் 21, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் மின்வாரியத்திற்கு, வடசென்னை விரிவாக்க அனல்மின் நிலையம் உள்ளது. அங்கு, தலா 600 மெகா வாட் திறனில் இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம், சென்னையின் மின்தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில், இரண்டாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று முன்தினம் மாலை முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

