ADDED : மே 24, 2024 02:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி அய்யனார் கோயில் தெருவில் 10 ஆண்டுகளுக்கு முன் போர்வெல் உடன் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன் மோட்டார் பழுதானது. தொட்டியை சமூக விரோதிகள் சேதப்படுத்தினர். இதனால் குறிப்பிட்ட அளவு மட்டுமே தண்ணீர் நிரப்பும் நிலையில் உள்ளது. மேலும் குழாய்களில் திருகு இல்லாததால் நீர் வீணாகிறது.
பெண்கள் கூறியதாவது: பலமுறை கூறியும் ஊராட்சி நிர்வாகம் மோட்டார் பழுதை சரி செய்யவில்லை. நாங்களே சொந்த செலவில் சரி செய்துள்ளோம்.
மேலும் மோட்டார் இயக்கும் சுவிட்ச் பழுதாகி உள்ளதால் அச்சத்துடன் பயன்படுத்துகிறோம். தொட்டியை மாற்றி பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.