ADDED : ஆக 31, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர் சிவமுத்துக்குமாரசாமி ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தின் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் சேர்த்து ஒரு லட்சத்து 1546 டன் உரங்கள் இருப்பில் உள்ளன. மதுரையில் யூரியா 833 டன், டி.ஏ.பி. 462 டன், எம்.ஓ.பி. 436 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 1404 டன் இருப்பு உள்ளது. இறக்குமதி செய்யப்படும் டி.ஏ.பி. உரத்திற்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்கள், நானோ டி.ஏ.பி. திரவ உரத்தை பயன்படுத்தலாம் என்றார். மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் வாஞ்சிநாதன் உடனிருந்தனர்.