ADDED : ஜூலை 23, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் - அவனியாபுரம்ரோட்டில் உள்ள மயானம் பராமரிப்பின்றி உள்ளது.
அங்குள்ள இரண்டு தகன மேடைகளின் மேல்பகுதியும், தரைப்பகுதியும் சேதம் அடைந்துள்ளன. இரவு நேரங்களில் நுழைவு வாயில் கேட் பூட்டப்படுவதில்லை. இதனால் மயான வளாகம் திறந்தவெளி பாராக பயன்படுத்தப்படுகிறது. மது குடிப்பவர்கள்அங்குள்ள மின் விளக்குகளை உடைத்துச் செல்கின்றனர். குன்றத்து மயானத்தை முழுமையாக பராமரிக்க நடவடிக்கை தேவை.
மண்டல தலைவர் சுவிதா கூறுகையில், ''மேற்கு மண்டல பகுதிகளில் சேதமடைந்துள்ள மயானங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. அப்பணிகள் நிறைவடைந்ததும் சீரமைக்கப்படும்'' என்றார்.